கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30 யானைகள் மேலகவுண்டனூர், திம்மசத்திரம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை மிதித்தும், தின்றும் நாசப்படுத்தியது.

இதனையடுத்து 40 யானைகளும் சானமாவு காட்டுக்குள் முகாமிட்டிருப்பதால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, சானமாவு காட்டில் யானைகள் முகாமிட்டிருப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.