புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பட்டி பகுதியில் கனெக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விகாஷ் அதே பகுதியில் வசிக்கும் கிருபாநிதி ஆகியோர் ஆலங்குடி வழியாக மோட்டார் சைக்கிளில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதே சமயம் தெற்கு பார்த்தம்பட்டியை சேர்ந்த விக்னேஷ், சரவணன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அண்ணாநகர் பாலம் அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் 3 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.