திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பெருமாள்புரம் அப்பல்லோ காலனியில் முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலப்பாளையம் பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இந்நிலையில் முகமது இஸ்மாயில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் முகமது இஸ்மாயிலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.