மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதால் தற்போது 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாநில முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ளார்.

தற்போது அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதம் வரை அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு வருடத்திற்கு 1640 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படும். மேலும் தற்போது 42 சதவீத அகவிலைப்படி உயர்வால் 8 லட்சம் அரசு ஊழியர்கள், 4.40 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.