இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வகையில் இந்தியாவில் உள்ள அனைவரும் தங்கள் ரேஷன் அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது ரேஷன் கார்டு மற்றும் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடுவை மேலும் மூன்று மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது . இந்த காலக்கெடு மார்ச் 31ஆம் தேதி உடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூன் 30-ம் தேதி வரை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இதுவரை ரேஷன் கார்டு மற்றும் ஆதார் இணைக்காதவர்கள் உடனடியாக பொது விநியோகத் திட்ட இணையத்திற்கு சென்று இரண்டையும் இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.