இங்கிலாந்தை சேர்ந்த டான் ஜேம்ஸ் (33) என்ற பெண் கடின உடற்பயிற்சியின் மூலமாக 123 கிலோவில் இருந்து தனது உடல் எடையை 78 கிலோவாக குறைத்துள்ளார். எடை அதிகரித்ததன் காரணமாக நெருங்கிய நண்பர்களின் வீட்டிற்கு கூட அவர் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி அவதிப்பட்டு வந்துள்ளார்.

அதன்பிறகு தனக்கு பிடித்த சாக்லேட் மற்றும் கிழங்கு என பலவற்றை சாப்பிடாமல் நிறுத்தினார். சுமார் நான்கு வருட போராட்டத்திற்கு பிறகு 45 கிலோ எடையை இவர் குறைத்துள்ள நிலையில் தற்போது 78 கிலோ உள்ளார். இவருடைய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.