திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் வேரூன்ற காரணமாக அமைந்த புரட்சி தலைவர் அண்ணாதுரை, சமூக நீதிக்கும், மொழி மரியாதைக்கும் அடித்தளம் இட்ட தலைவராக பார்க்கப்படுகிறார்.
இன்று (செப்டம்பர் 15) அவரது 117வது பிறந்த நாளையொட்டி, பல்வேறு தரப்பினரும் அவரை நினைவுகூர்ந்தது பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது சமூக ஊடகத்தில், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு காணொளியை வெளியிட்டு, அண்ணா பிறந்த நாளை நினைவுகூர்ந்துள்ளார்.
தமிழன்னை தந்திட்ட தலைமகன்!
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா 🖤♥
தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!#ஓரணியில்தமிழ்நாடு #RememberingAnna pic.twitter.com/gIPWj2qnqv
— M.K.Stalin (@mkstalin) September 15, 2025
“>
அதில், “தமிழன்னை தந்திட்ட தலைமகன், திமுக எனும் நம் உயிரை தாயென அளித்திட்ட திருமகன். தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு, திமுக தொண்டர்கள் மற்றும் சமூக வலைதளங்களிலுள்ள பலரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அண்ணாவின் அறம் சார்ந்த அரசியல் மற்றும் மொழி உணர்வுகளை மீண்டும் நினைவூட்டும் வகையில், இந்த வீடியோ தமிழர் வரலாற்றில் ஒரு உணர்வுப்பூர்வ நினைவாக அமைந்துள்ளது.
