தவெக தலைவர் விஜய்யை ஒப்பிட்டு சிலர் சிரஞ்சீவி, கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் அரசியலில் அடைந்த நிலையை மேற்கோளாகக் கூறி விமர்சித்து வருகின்றனர். இதற்கு  பதிலளித்து இயக்குநரும் நடிகருமான சுப்பிரமணிய சிவா, விஜய்க்கு உறுதியான ஆதரவை தெரிவித்து களமிறங்கியுள்ளார்.

“பல ஊர்களில் நேரடியாக மக்கள் மனதை உணர்ந்த பிறகு சொல்கிறேன். விஜய்யை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். வரலாற்றின் வேலை, துணிந்து செயல்படுவதை தலைவனாக்கும். அது விஜய்யின் அரசியல் வரவிலும் நிகழும்” என கூறியுள்ளார்.

மேலும், “விஜய் ஒரு நட்சத்திரமாக மட்டுமல்ல, மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் ஆளுமையாகவும் மாறியுள்ளார். அரசியலில் அவரது வரவு என்பது உண்மையில் ஒரு பெரிய அதிர்வே. சிரஞ்சீவி, கமல்ஹாசன் போன்றவர்களுடன் ஒப்பிட்டு விமர்சிக்க வேண்டாம். மக்கள் உணர்வுகளும், கால சூழ்நிலையும் வேறு” என அவர் தெரிவித்துள்ளார். சுப்பிரமணிய சிவாவின் இந்த ஆதரவு, தவெக வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.