உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், அவசர கால ஆம்புலன்ஸ் சேவை உரிய நேரத்தில் கிடைக்காததால், காயமடைந்த நோயாளி ஒருவர் ஈ-ரிக்ஷாவில் கட்டிலுடன் வைத்து அழைத்துச் செல்லப்பட்ட அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அக்யுயுயா கலான் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
மேலும் அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் சேவைக்காக நான்கு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி, அவரை ஒரு கட்டிலில் படுக்கவைத்து, அந்த கட்டிலை அப்படியே ஒரு ஈ-ரிக்ஷாவில் ஏற்றி சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
यूपी के बदायूं में जुगाड़ से ई रिक्शा को एंबुलेंस बनाया है . ई रिक्शा में चारपाई डाला गया है.
क्योंकि 5️⃣ घंटे के इंतज़ार के बाद कोई एंबुलेंस नहीं आई. pic.twitter.com/k8go2gXGTX
— Priya singh (@priyarajputlive) May 12, 2026
“>
இதனால் மருத்துவமனைக்குச் சென்றபோது மகேஷின் எலும்பு முறிந்திருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், வறுமை காரணமாக சிகிச்சைக்குத் தேவையான போதிய பணம் இல்லாததால், அவரை மீண்டும் அதே ஈ-ரிக்ஷாவில் வீட்டிற்கே அழைத்து வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் அரசு நிர்வாகத்தின் மெத்தனப் போக்கையும், ஏழை மக்களின் அவலநிலையையும் வெளிச்சம் போட்டுக்காட்டும் இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவ அதிகாரிகள் தற்போது உறுதி அளித்துள்ளனர்.
