இண்டிகோ விமானத்தில் ஒரு பயணி, தனது போனைப் பயன்படுத்தி தொடர்ச்சியாகத் திரைப்படங்கள் அல்லது தொடர்களைப் பார்ப்பதற்காக ட்ரைபாட் ஒன்றை கொண்டு வந்துள்ளார். விமானத்தில் இருக்கையில் அமர்ந்தபடியே போனை கையில் பிடித்து வைத்திருக்காமல், ட்ரைபாடை முன்பக்கத்தில் அமைத்து, கண் மட்டத்தில் திரையை வைத்து ‘ஸ்டுடியோ செட்அப்’ போல பார்த்துள்ளார்.
மேலும் இது 35,000 அடி உயரத்தில் விமானத்தில் இருப்பதை மறந்து வீட்டில் இருப்பதை போல சுதந்திரமாக செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இந்த காட்சியை ஒருவர் “வீட்டில் இருப்பது போல டிவி ஷோ, திரைப்படம் பார்க்க ட்ரைபாட் கொண்டு வந்துள்ளார். முழு ஸ்டுடியோ செட்அப்பை 35,000 அடிக்கு கொண்டு வந்துவிட்டார்” என்று வியப்புடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. விமான பயணத்தில் இத்தகைய ஏற்பாடுகள் புதுமையானவை மற்றும் வசதியானவை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இண்டிகோ விமானத்தில் இயல்பான இன்ஃப்ளைட் என்டர்டெயின்மென்ட் வசதிகள் இருந்தாலும், சொந்த போனில் தனிப்பட்ட உள்ளடக்கத்தை இவ்வாறு அமைத்து ரசிப்பது பயணிகளின் படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறது.
