“பெங்களூருவில் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது ஒன்றுமே இல்லை” என்று தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து, பெரும் விவாதத்தையும் கேலி கிண்டல்களையும் கிளப்பியுள்ளது. இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூருவில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவது உண்மையே என்றாலும், ஒரு கோடி ரூபாய் வருமானம் என்பது ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தின் தேவைகளை விட பல மடங்கு அதிகம் என்று கூறி நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் பெங்களூரு காவல்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கமும் நகைச்சுவையான முறையில் தலையிட்டதுதான் ஹைலைட். அந்த டெக்கீயின் புலம்பலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காவல்துறையினர் அவரை கலாய்த்து கருத்து தெரிவித்தனர். இவ்வளவு பெரிய தொகையை ஒரு சாதாரண வருமானமாகப் பார்க்கும் அவரது மனநிலையை சுட்டிக்காட்டி இணையவாசிகள் வெளியிட்ட கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.