10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இந்திய விமானப்படை 3,500 அக்னிவீரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://agnipathvayu.cdac.in மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஜூலை 27-ல் பதிவு தொடங்கும், கடைசி தேதி ஆகஸ்ட் 17. அக்டோபர் 13ஆம் தேதி தேர்வு முகாம் நடத்தப்படும் என ஐஏஎஃப் தெரிவித்துள்ளது. இந்த பணியில் சேரும் முதல் ஆண்டில் மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டில் ரூ.33,000, மூன்றாம் ஆண்டில் ரூ.36,500, நான்காம் ஆண்டில் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.