ஜம்மு காஷ்மீர் அரசு திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகிறது. பொதுவாக படங்களில் காஷ்மீரில் இருக்கும் ஏதாவது ஒரு இடம் இடம்பெற வேண்டும் என்று பெரும்பாலான படக்குழு விரும்புகிறார்கள். இதன் காரணமாக காஷ்மீரில் பெரும்பாலான படங்களின் சூட்டிங் நடைபெறுகிறது.

இதன் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது திரைப்பட படப்பிடிப்புக்காக 300 புதிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் காஷ்மீரில் படங்கள், வெப் சீரிஸ் மற்றும் நாடகங்கள் என 200-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளதாக ஜேகே டூரிசத்தின் நிர்வாக செயலாளர் சையத் அபித் ரக்ஷித் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வருடம் படப்பிடிப்புக்காக 300 புதிய இடங்களை சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.