இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். தற்போது கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உடனடியாக ரயில் பயணங்களை செய்பவர்களுக்காக தட்கல் வசதியை இந்திய ரயில்வே ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தட்கல் டிக்கெட் கிடைப்பது கடினமானதாக இருக்கும். ஏசி வகுப்பில் தட்கல் புக் செய்வதற்கான நேரம் காலை 10 மணி. இதேபோன்று ஸ்லீப்பர் கோச்சில்  டிக்கெட் புக் செய்வதற்கான நேரம் காலை 11 மணி. தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்தாலும் சில நேரங்களில் சீட் கிடைக்காது. இந்நிலையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சீட் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

அதன்படி டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாகவே போர்ட்டலில் சென்று ஓபன் செய்து கொள்ள வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பாகவே உங்கள் விவரங்களை அதில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இது மாஸ்டர் லிஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஐஆர்சிடிசி போர்டலில் டிக்கெட் முன்பதிவு தேவைப்படும் விவரங்களை முன்கூட்டியே பதிவிட வேண்டும். அதன் பிறகு டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஏற்கனவே சேமித்து வைத்த விவரங்களை அதில் இணைத்தால் சீக்கிரம் முன்பதிவு செய்துவிடலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரம் மிச்சமாகும். இதனால் சீட் பிரச்சனையும் வராது.