ஊழியர்கள் ஏதேனும் தங்களது தேவைக்காக திடீரென பணம் கிடைக்காத சூழலில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து (இபிஎஃப்) பணத்தை திரும்பப பெறலாம். இபிஎப் திட்டம் குறிப்பாக சம்பளம் பெறக்கூடிய ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது மற்றும் இது ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்குகிறது. இபிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான வழிகள் குறித்து நாம் தற்போது தெரிந்துகொள்வோம்.

EPFO ​​உறுப்பினர் e-SEWA-ன் அதிகாரப்பூர்வமான வலைத்தள பக்கத்துக்கு போகவேண்டும். பின் யூஏஎன் லாக்கின் விபரங்களை பயன்படுத்தி உங்களது கணக்கில் லாக் இன் செய்யவும். அடுத்து ஆன்லைன் சேவைகள் பிரிவுக்கு சென்று வழங்கப்பட்ட பட்டியலிலிருந்து உரிமைகோரல் (படிவம் 19, 31, 10C அல்லது 10D என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். உங்களது வங்கிக் கணக்கு எண்ணை வழங்கி வெரிஃபை எனும் ஆப்ஷனை கிளிக் செய்யவும். தொடர “ஆம்” என்பதனை தேர்ந்தெடுத்து, “ஆன்லைன் உரிமை கோரலுக்குச் செல்லவும்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

அதனை தொடர்ந்து நான் விண்ணப்பிக்க விரும்புகிறேன் என்ற டேப்பின் கீழ் கிடைக்கும் ஆப்ஷன்களில் இருந்து உங்களுக்கு தேவையான குறிப்பிட்ட கோரிக்கையை தேர்ந்தெடுக்கவும். உங்களது இபிஎப் கணக்கில் இருந்து பணத்தை திரும்ப பெற பிஎஃப் அட்வான்ஸ் (படிவம் 31) ஆப்ஷனை தேர்வு செய்யவும். பணத்தை திரும்ப பெறுவதற்குரிய காரணம், விரும்பிய தொகை மற்றும் முகவரி ஆகிய தகவல்களை வழங்கி கடைசியாக உங்களது படிவத்தை சமர்ப்பிக்கவும்.