உத்திரபிரதேச மாநிலத்தில் புதிதாக கிரிக்கெட் மைதானம் அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ரூ. 300 கோடி செலவில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் அமைய இருக்கிறதாம். இந்த கிரிக்கெட் மைதானத்திற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதற்காக வாரணாசியில் உள்ள கன்ஜாரி என்ற இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம்.

இந்த பகுதியை சமீபத்தில் சமீபத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஆய்வு செய்தார். மேலும் ஏற்கனவே உத்திரபிரதேச மாநிலத்தில் லக்னோ மற்றும் கான்பூர் ஆகிய இரு பகுதிகளில் கிரிக்கெட் மைதானங்கள் இருக்கும் நிலையில் தற்போது 3-வதாக வாரணாசியிலும் கிரிக்கெட் மைதானம் அமைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.