அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்தார். இது குறித்த அவர் பேசியதாவது, ஒரு பிரச்சனை நடந்த போது அதனை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் 72 நாட்கள் வீட்டை விட்டு அவர் வெளியே வரவில்லை. 15 நாட்களாக ஆபீஸை மூடிவிட்டு போய் விட்டாங்க. ஒரு பிரச்சனை வந்தால் முதலில் மக்களை சந்திக்கும் தைரியமும் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் தைரியமும் இருக்க வேண்டும்.

அதிமுகவைப் பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது. வருகிற தேர்தலில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்வார்கள். இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத விஜய் இப்படி பேசுவது சரியல்ல என்றார். அதன் பிறகு அதிமுக ஐடி விங் வெளியிட்ட பதிவில், பனையூர் பண்ணையாரே. இந்த FDFS டிக்கெட் எல்லாம் 2000 ரூபாய்க்கு விற்பனை செய்வது கொள்ளை இல்லையா.?

அப்படி பார்த்தால் உங்களுக்கு 30 வருஷமா கொள்ளையடித்த அனுபவம் இருக்கு தானே. கொஞ்சம் ஓரமாய் போய் விளையாடுங்க போங்க அங்கிள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கடும் விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது ‌