தவெக தலைவர் விஜய் அதிமுகவை விமர்சித்ததற்குப் பதிலடியாக, அதிமுகவினர் சமூக வலைதளங்களில் “COPY PASTE” என்ற ஹேஷ்டேக்கை பரப்பி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். விஜய்யை “பனையூர் பண்ணையார் அங்கிள்” என்று கிண்டலாக அழைத்துள்ள அவர்கள், “நீங்க என்ன ஒரிஜினலா? நீங்க பக்கா காப்பி பேஸ்ட்” என்று சாடியுள்ளனர். அந்தப் பதிவில், “அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தயவில்தான் நீங்கள் சினிமாவிற்குள் வந்தீர்கள். சினிமாவிற்குள் வந்த பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஆகியோரின் ஸ்டைலை அப்படியே காப்பி பேஸ்ட் (COPY PASTE UU..) செய்தீர்கள்.

இப்போது அரசியலுக்கு வந்த பிறகு மற்ற கட்சி வரலாற்றுத் தலைவர்களின் கொள்கைகளையும், அவர்களின் ‘Legacy’-யையும் திருடி காப்பி பேஸ்ட் செய்து வருகிறீர்கள்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளனர். “இப்படி அடுத்தவர் வளர்த்த குதிரையில் சவாரி செய்யும் நீங்கள் எப்படி ஒரிஜினல் தலைவராக முடியும்?” என்று அதிமுகவினர் எழுப்பியுள்ள இந்தக் கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.