சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களைப் பெறுவதற்காக இளைஞர்கள் பலர் தங்கள் உயிரையே பணையம் வைத்து ஆபத்தான ஸ்டண்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகப்பெரிய மலைப்பாம்பின் அருகில் எந்தவித பயமுமின்றி மிகுந்த தன்னம்பிக்கையுடன் நிற்கிறார். அந்தப் பாம்பு மிகவும் சாதுவானது, தங்களுக்குப் பழகிவிட்டது என்ற தவறான எண்ணத்தில், அந்த நபர் மெதுவாகத் தனது தலையை அந்த மலைப்பாம்பின் திறந்த வாய்க்குள் நுழைக்கிறார். இதனைச் சுற்றியுள்ள சிலர் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.

அடுத்த கணமே, அந்த மலைப்பாம்பு ஆக்ரோஷமாக மாறி அவரது தலையைக் கவ்வ முயன்றதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதைப் பார்த்ததும் சுற்றியிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு அந்த நபரை மீட்க ஓடி வந்தனர். அத்துடன் அந்த வீடியோ முடிவடைவதால், அந்த நபருக்கு என்ன ஆனது, அவர் காயமின்றி தப்பினாரா என்ற விவரம் தெரியவில்லை. ‘@WolfprwX’ என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டு, சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ள இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். வனவிலங்குகள் எவ்வளவு சாதுவாக இருந்தாலும், ஆபத்தானவை என்பதை உணராமல் இப்படி “மரணத்தோடு விளையாடும்” நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.