மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேயின் பிறந்தநாளை முன்னிட்டு, மும்பையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
மேலும் தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலையால் அவதிப்படும் சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மும்பை மாநகரம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பெட்ரோல் பங்குகளில் இந்த தள்ளுபடி சலுகை ஒரு நாள் மட்டும் பொதுமக்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mumbai, Maharashtra: The Maharashtra Navnirman Sena (MNS) announced a special petrol discount of ₹5 per litre for two-wheeler riders in the Mahim Assembly area on 14 June, on the occasion of party chief Raj Thackeray’s birthday. The offer will be available from 9 am to 9 pm at a… pic.twitter.com/DEXa7RaO0S
— IANS (@ians_india) June 14, 2026
“>
இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கட்சியின் பிரிவுத் தலைவர் ஜெய் ஸ்ரிங்கார்புரே குறிப்பிட்டுள்ளார்.
இந்த விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தரக் குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் ஒரு சிறு முயற்சியாகவே இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மும்பை வாழ் இருசக்கர வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
