பெரியகுளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஒருபுறம் தயாராகி வரும் வேளையில், ஓபிஎஸ் – டிடிவி தினகரன் கூட்டணி யாருடன் இணையும் என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

​அந்தப் பேட்டியின் போது அவர் கூறுகையில், “இந்த தை மாதத்தில் 30 நாட்கள் இருக்கிறது; அந்த 30 நாட்களுக்குள் ஏதாவது ஒரு சுப தினத்தில் கூட்டணி குறித்த நல்ல முடிவை நான் அறிவிப்பேன்” என்றார். குறிப்பாக, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையுமா என்ற விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், அவரது இந்த “30 நாள்” கெடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.