தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி பகுதியில் தாயை இழந்த 14 வயது சிறுமி தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 25-ஆம் தேதி சிறுமியின் ஊரில் மழை வேண்டி அர்ஜுனன் தவசு தெருக்கூத்து நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தெருக்கூத்து கலைஞர்களான கொல்லாபுரி(65), மணிகண்டன்(48), மஞ்சுநாதன்(33) ஆகியோர் தூங்கி கொண்டிருந்த சிறுமியின் வாயை பொத்தி வயல்வெளிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என சிறுமியை மிரட்டியுள்ளனர். இதனையடுத்து உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது உறவினர்களிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மணிகண்டன், மஞ்சுநாதன், கொல்லாபுரி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.