நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் துப்புகுட்டி பேட்டையில் இருக்கும் தனியார் மண்டபம் அருகே மூன்று பேர் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் அந்த வழியாக சென்ற பொது மக்களிடம் தகராறு செய்தனர். இதனை ஷெரீப் (20) என்பவர் தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த மூன்று பேரும் ஷெரீப்பை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த ஷெரீப் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஷெரீப்பை தாக்கிய குற்றத்திற்காக முத்தமிழ் நகரை சேர்ந்த ஆனந்த், நிஷாந்த், சுரேஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.