இந்திய தேர்தல் ஆணையம் 15 ஆண்டுகளைக் கடந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பெங்களூருவில் பெல் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டுக்குரிய 1,260 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 580 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் என மொத்தம் 1840 பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இருக்கிறது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்டவை.

இந்நிலையில் தற்போது நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பதிவு எண்களை சரிபார்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமது  மேலாளர் செல்வராசு மேற்பார்வையிலான ஊழியர்கள் பெல் நிறுவன பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும் இப்பணிகள் இன்று முடிக்கப்பட்டு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கூறியுள்ளனர்.