இந்தியாவைச் சேர்ந்த கிருத்திகா ஜெயின் என்பவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அவர் சமீபத்தில் நள்ளிரவு 3 மணிக்கு அந்த ஊர் தெருக்களில் எந்தவித பதற்றமும் இன்றி, தனியாக நடந்து வீட்டுக்குச் செல்லும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

“இங்கே பின்னால் யாராவது வருகிறார்களா? என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை; சிங்கப்பூரில் இது ஒரு ஆடம்பரம் அல்ல, இயல்பான வாழ்க்கை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இது போன்ற ஒரு சூழலை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றும் அவர் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kritika Jain (@theroamingtoes)

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த இந்தியப் பெண்கள் பலர், “பாதுகாப்பு என்பது ஒரு கொண்டாட்டமாக இல்லாமல், இயல்பான ஒன்றாக இருக்க வேண்டும்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

“இந்த வீடியோவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும், அதே சமயம் நமது நாட்டின் நிலையை நினைத்து வருத்தமாகவும் இருக்கிறது” எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை விட, ஒரு பெண்ணின் நிம்மதியான பயணமே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.