மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நந்தூர்பார் மாவட்ட பொது மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காரணங்களால் சுமார் 179 குழந்தைகள் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறைந்த எடை, மூச்சு திணறல் மற்றும் சுவாச கோளாறு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் ஜூலை மாதம் 75 குழந்தைகள், ஆகஸ்ட் மாதம் 86 குழந்தைகள், செப்டம்பர் மாதம் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

அங்கு பெண்களுக்கு இரத்த சோகை தொடர்பான நோய்கள் இருப்பதால் பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து நந்தூர் பார் மருத்துவமனை மிஷன் லக்ஷயா 84 நாட்கள் என்ற முக்கியமான முயற்சியை தொடங்கியுள்ள நிலையில் இதன் மூலம் குழந்தை இறப்புக்கான மூல காரணங்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்துள்ளது.