பயணம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் சுற்றுலா பிரியர்களுக்கும் கப்பல் பயணத்தில் கனவு உலகத்தை காண்போருக்கும் விருந்து படைக்க தயாராகி வருகின்றது எம்பி கங்கா விலாஸ் என்னும் இந்திய கப்பல். உலகின் மிக நீண்ட சொகுசு கப்பலாக கருதப்படும் இந்த எம்பி கங்கா விலாஸ் இசை, கலாச்சார நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி கூடம், பைவ் ஸ்டார் ஹோட்டலில் பரிமாறப்படும் உணவுகள் என்று எல்லா வசதிகளும் உள்ளன.
62 மீட்டர் நீளம் 12 மீட்டர் அகலம் கொண்ட இந்த கப்பல் மூன்று தலங்களை கொண்டிருக்கின்றது. இதில் 36 பயணிகள் தங்குவதற்கு 18 அறைகள் உள்ளன. 80 பயணிகள் வரை இதில் பயணிக்கலாம். ஒரு பயணிக்கு சுமார் 12 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த சொகுசு கப்பல் தனது முதல் பயணத்தை ஜனவரி மூன்றாம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கி 51 நாட்களில் 3,200 கிலோமீட்டர் தொலைவு பயணித்து மார்ச் ஒன்றாம் தேதி அசாம் மாநிலம் திப்ரூகர் நகரில் நிறைவு செய்கின்றது. பீகார், ஜார்கண்ட் ,மேற்கு வங்காளம் என ஐந்து மாநிலங்கள் வழியாக கங்கை, பிரம்மபுத்திரா உள்பட 27 நதிகளை கடந்து 50 சுற்றுலா தளங்களை சுற்றி காண்பிக்கின்றது. இந்தியாவில் பயணிக்க தொடங்கும் இந்த கப்பல் வங்கதேச நாட்டிலும் பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.