வண்டலூர் ராமலிங்கம் நினைவு நாளான ஜனவரி 25ஆம் தேதி மற்றும் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள், தமிழ்நாடு மதுபானம் விதிகளின் கீழ் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் என அனைத்தும் கண்டிப்பாக மூடப்படும் எனவும் மதுபானம் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாகவும் அரசு உத்தரவிட்டுள்ளது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.