நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக மநீம அவசர செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது. அக்கட்சியின் தலைவர் கமல் தலைமையில் காலை 10.30 மணிக்கு கூடும் இக்கூட்டத்தில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, கட்சி கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. குறிப்பாக, திமுக கூட்டணியில் இடம்பெறுவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தல் பணிக்குழுக்களும் அமைக்கப்படவுள்ளன