ரஷ்ய விஞ்ஞானிகள் மனிதர்களின் வாழ்நாளை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு புரட்சிகரமான மரபணு சிகிச்சை மருந்தைக் கண்டறிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 80 ஆண்டுகளாக இருக்கும் நிலையில், வயதான தோற்றத்தையும் முதுமையையும் தடுத்து நிறுத்தும் இந்த புதிய கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் ஒரு மாயாஜாலமாகப் பார்க்கப்படுகிறது.
இது குறிப்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற விருப்பத்தின் பின்னணியில் இந்த ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மருந்து உடலில் உள்ள செல்களை நீண்ட காலம் இளமையாக வைத்திருக்க உதவுவதுடன், முதுமைக்குக் காரணமான உயிரியல் மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் மனித வாழ்வியலை முற்றிலும் மாற்றியமைக்கும் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், 100 வயதைக் கடந்தும் 25 வயது இளைஞனைப் போன்ற சுறுசுறுப்புடன் வாழ முடியும் என்ற இந்த நம்பிக்கை, ஒருபுறம் வியப்பை ஏற்படுத்தினாலும், இதன் பாதுகாப்பான பயன்பாடு குறித்து உலகளாவிய விஞ்ஞானிகளிடையே இன்னும் விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
