ஏற்கனவே கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில், பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் 60 சரக்கு லாரிகளை வெடிவைத்துத் தகர்த்துத் தீக்கிரையாக்கியுள்ள சம்பவம் ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் உலுக்கியுள்ளது. இந்தத் தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே லாகூர் முதல் இஸ்லாமாபாத் வரை கடுமையான நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடுமையான மக்கள் கொந்தளிப்பு நிலவி வரும் சூழலில், தற்போது பலுசிஸ்தானின் நுக்ஸாகி பகுதியில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் போராளிகள் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளனர். பலுசிஸ்தானில் இருந்து கனிம வளங்கள் மற்றும் எல்பிஜி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த 60 லாரிகளை வழிமறித்த கிளர்ச்சியாளர்கள், அவை அனைத்தையும் வெடிவைத்துத் தகர்த்துச் சாம்பலாக்கியுள்ளனர்.

<a href=”http://

“>

இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பலுசிஸ்தான் ஆர்வலர் மிர் யார் பலுச், “பாகிஸ்தான் விரைவில் அடுத்த சோமாலியாவாக மாறப்போகிறது. பலுசிஸ்தானின் இயற்கை வளங்கள் இல்லாமல் பாகிஸ்தானால் ஒரு மாதம் கூடத் தாக்குப்பிடிக்க முடியாது. எங்கள் வளங்களை அவர்கள் கொள்ளையடிக்க நாங்கள் இனி அனுமதிக்க மாட்டோம்” என அதிரடியாக எச்சரித்துள்ளார்.

தற்போது பாகிஸ்தானுக்கு நாலாபுறமிருந்தும் ஆபத்து சூழ்ந்துள்ளதாக ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். முதலாவதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் குழப்பம் நீடிக்கிறது. இரண்டாவதாக, பலுசிஸ்தானில் வளங்கள் சூறையாடப்படுவது தடுக்கப்பட்டு லாரிகள் எரிக்கப்பட்டுள்ளன. மூன்றாவதாக, வஜிரிஸ்தான் பகுதி கிளர்ச்சியாளர்களும் பாகிஸ்தானுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

நான்காவதாக, கடந்த ஜூன் 10-ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலால் ஆத்திரமடைந்துள்ள தலிபான்கள், எல்லையில் பாகிஸ்தானுக்கு எதிராகப் படைகளைக் குவித்து வருவதால் எல்லைப் பகுதி போர்க்களமாக மாறியுள்ளது. 25 கோடி மக்கள் தொகையைக் கொண்ட பாகிஸ்தான், ஒரே நேரத்தில் பலமுனைகளில் இருந்து தாக்கப்பட்டு வருவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது