அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ‘சிக்ஸ் ஃபிளாக்ஸ்’ பொழுதுபோக்கு பூங்காவில், திடீர் மின்தடை காரணமாக 245 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்த ரோலர் கோஸ்டர் பாதியிலேயே நின்றது. கட்டுமானப் பணிகளின் போது பூமிக்கடியில் இருந்த மின் இணைப்பை தவறுதலாகத் துண்டித்ததால் இந்த மின்தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்த ரோலர் கோஸ்டரில் பயணம் செய்த பயணிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த உச்சியில் சிக்கித் தவித்தனர். இதனைத் தொடர்ந்து, பூங்கா ஊழியர்கள் பயணிகளின் பாதுகாப்பு வளையங்களைத் திறந்து, மிகக் குறுகிய அவசரக்கால படிக்கட்டுகள் வழியாக அவர்களைக் கீழே பத்திரமாக இறக்கி அழைத்து வந்தனர்.
On Saturday, visitors at an American amusement park, Six Flags in Texas, were stuck for nearly an hour on a roller coaster due to a malfunction; they were forced to walk down along the tracks. pic.twitter.com/YgIHy2gwdn
— Desi Sura (@DesiSura) May 20, 2026
“>
மேலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பயணிகள் பயத்துடன் தண்டவாளத்தின் ஓரத்தில் வரிசையாக இறங்கி வரும் காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடாக மீண்டும் இலவசமாக வந்து செல்ல டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
