தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகமான கமலாயத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் பாஜக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் சொன்னது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது ஆவேசமான அண்ணாமலை தன் மீதான புகாருக்கு மௌனம் மட்டுமே பதில் என்று கூறினார். இந்நிலையில் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் ஒரு கட்டத்தில் அண்ணாமலை நிதானத்தை இழந்து பத்திரிக்கையாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதோடு யூடியூப் சேனலுக்கு கேள்வி கேட்பதற்கு அதிகாரம் கிடையாது என்றும், வேண்டுமானால் என்னுடைய பேட்டியை எடுத்துக் கொள்ளுங்கள்.

இல்லை என்றால் புறக்கணித்துவிட்டு செல்லுங்கள். உங்கள் காலில் விழுந்தெல்லாம் நான் கெஞ்ச மாட்டேன் என்று கூறினார். அதன் பிறகு அண்ணாமலை தான் கையில் கட்டியிருந்த ரஃபேல் வாட்சை ஒரு செய்தியாளரிடம் கொடுத்து உங்களுக்கு நான் 24 மணி நேரம் தருகிறேன். இந்த வாட்சை தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று திறந்து பாருங்கள். அதில் ஒட்டுக் கேட்கும் கருவி இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பாருங்கள். அதற்கான முழு செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். இந்த வாட்ச் மீதான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். மேலும் அண்ணாமலை பத்திரிகையாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கமலாயமே போர்க்களமாக மாறியது.[