தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின்படி, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் விருப்ப மனு விநியோகம் நேற்று உற்சாகமாகத் தொடங்கியது. சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் அலைகடலெனத் திரண்டு வந்து ஆர்வத்துடன் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர்.

வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை இந்த விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கூறுகையில், இது வெறும் காகிதப் படிவம் அல்ல, தமிழக மக்களின் கனவுகளைத் தாங்கிப் பிடிக்கப் போகும் ஒரு புதிய மாற்றத்திற்கான உறுதிமொழிப் பத்திரம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகிவிட்டனர் என்பதற்குச் சாட்சியாக தவெக-வின் இந்தத் தேர்தல் களம் இப்போதே சரித்திரம் படைக்கத் தொடங்கிவிட்டது என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.