மாம்பழம் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. மாம்பழம் சாப்பிட்டதால் ஒரு பெண்ணின் உயிர் பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மாம்பழம் சாப்பிட்ட ஒரு பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது. உடனே குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மோங்கோ சாப்பிட்டதால் அவரது உடல்நிலை மோசமடைந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டிவருகின்றனர்.

கிடைத்த தகவலின்படி, இந்த சம்பவம் இந்தூர் ராஜேந்திர நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிஜல்பூரில் நடந்துள்ளது. 23 வயதான திருமணமான அர்ச்சனா என்ற பெண் உணவு சாப்பிட்ட பிறகு மாம்பழம் சாப்பிட்டார். இதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. தலையில் கடுமையான வலி இருந்தது. நீண்ட நேரமாகியும் அவரது துன்பம் குறையாததால், குடும்பத்தினர் அவரை கடந்த 8ஆம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து அர்ச்சனாவின் மாமனார் பன்சிலால் அடேரியா கூறுகையில்,  மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, ஒரு மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு, அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவர் ஒரு கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார், மருத்துவர் அவளுக்கு சில மருந்துகளை பரிந்துரைத்தார். ஆனால் சிறிது நேரம் கழித்து அவர் தலைவலிக்கிறது என்று சொன்னார்.

அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பிபி குறைந்து கொண்டே வந்தது. அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் நச்சுத்தன்மை வாய்ந்த மாம்பழத்தை சாப்பிட்டிருக்கலாம், முன்னதாக கிராமத்தில் பலர் மாம்பழங்களை சாப்பிட்டு நோய்வாய்ப்பட்டதாக அவர் கூறினார். அதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராஜேந்திர நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏஎஸ்ஐ ராஜேந்திர சிங் சவுகான் கூறுகையில், அவரது மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றார்.. அவரது குடும்பத்தினரின் வாக்குமூலங்களையும் போலீசார் பதிவு செய்து வருகின்றனர்.அர்ச்சனாவுக்கு சேத்தன் என்பவருடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சேத்தன் ஒரு விவசாயி மற்றும் ப்ராபர்டி வேலை செய்கிறார். அர்ச்சனாவின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.