குஜராத் மாநில அரசனது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா முக்கிய மந்திரி அமிர்தம் என்ற காப்பீடு திட்டத்தின் மூலமாக 10 லட்சத்தை அதிகரிக்க திருத்தம் மேற்கொண்டுள்ளது. மாநில அரசின் சார்பாக இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு 10 லட்சம் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். பிப்ரவரியில் மாநில பட்ஜெட்டில் இந்த திட்டத்தின் கீழ் காப்பீட்டு தொகை 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக இரட்டிப்பாக்குவதாக நிதியமைச்சர் கனுவாய் தேசாய் அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை, இதயம், கல்லீரல் சிகிச்சைகள் செய்யலாம். மாநிலத்தில் உள்ள 2027 அரசு மருத்துவமனைகள் 73 தனியார் மற்றும் 18 மத்திய அரசு மருத்துவமனைகளில் இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கவும் அல்லது அறுவை செய்யவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.