மத்திய அரசின் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் என்ற திட்டத்தின் கீழ் திருமணமான தம்பதிகள் மாதத்திற்கு 200 ரூபாய் வரை முதலீடு செய்து ஆண்டு வருமானமாக 72000 பெறலாம். PMSYM என்பது முதலீட்டு பாதுகாப்போடு நியாயமான வருமானத்தை அளிக்கக்கூடிய ஒரு திட்டமாகும். இதில் அமைப்பு சாரா தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்ட கூலி தொழிலாளர்கள் ,விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் மாத வருமானம் 15 ஆயிரம் அல்லது அதற்கு குறைவாக உள்ள 18 முதல் 40 வயதுடைய வயதைச் சேர்ந்தவர்களுக்கு இந்த திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள்.

இந்த திட்டத்தின் கீழ் திருமணமான தம்பதிகள் வருடத்திற்கு 72,000 ஓய்வூதியம் பெறுவது எப்படி என்றால் ஒரு நபருக்கு 30 வயது இருந்தால் மாதாந்தோறும் 100 செலுத்த வேண்டும். ஒரு தம்பதியர் மாதத்திற்கு ₹200 செலவிடுகிறார் எனவே ஒரு வருடத்தில் 1200 ரூபாயாக இருக்கும். 60 வயதை எட்டிய பிறகு வருடத்திற்கு ஓய்வூதியமாக ஒருவருக்கு 36,000 வீதம் தம்பதிகளுக்கு மொத்தமாக 72 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.