ஐஆர்சிடிசி  சுற்றுலா மற்றும் பயணம் தொடர்பான பேக்கேஜ்களை வழங்கி வரும் நிலையில் தற்போது லே லடாக்கிற்கான பேக்கேஜ் அறிவித்துள்ளது. லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக இந்தியாவில் நிர்வகிக்கப்படும் பெரிய காஷ்மீர் பிராந்தியத்தில் ஒரு பகுதி. லே டூர் பேக்கேஜ் 7 பகல் மற்றும் 6 இரவுகளில் அனைத்து முக்கிய இடங்களையும் உள்ளடக்கிய சுற்றுலாவில் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். கர்துங்கா கணவாய் வழியாக பல இடங்களுக்கு  பயணம் செய்து பூக்களின் சுரங்கமான நுப்ரா பள்ளத்தாக்கை அடைய முடியும்.

புனித சிந்து மற்றும் சம்ஸ்கிருநதியின் சங்கமத்தை கண்டு மகிழலாம்.IRCTC லே பேக்கேஜ்களில் நல்ல தரமான  கூடாரமான ஹோட்டல், தரமான தங்குமிடங்கள் உள்ளிட்டவைகளும் அடங்கும். அனைத்து பயணிகளுக்கும் பஃபே வழங்கப்படுகிறது. லே விமான பேக்கேஜுகளுக்கு ஒரு கலாச்சார வழிகாட்டியும் இருக்கிறார்கள். தேவையான அனைத்து அனுமதிகள் நினைவுச்சின்னங்களுக்கான நுழைவு கட்டணம், பயண காப்பீடு, ஜி எஸ் டி ஆகியவை இந்த பயணத்திலேயே சேர்க்கப்படுகிறது. இந்த முழுமையான டூர் பேக்கேஜுக்கு ஒரு நபருக்கு 58 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும்..