ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்த நிலையில், ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர்கள் அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைந்த ரன்களில் அவுட் ஆனது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பொதுவாக யார் நன்றாக பந்து வீச்சினாலும் அவர்களை மதித்து விளையாட வேண்டும்.
ஒருவேளை விக்கெட்டுகள் விழாமல் போயிருந்தால் ரோகித் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஒரு ஓவர் முன்னதாகவே போட்டியை முடித்திருப்பார்கள். இருப்பினும் அர்ஷித் ரானா, ஸ்டார்க் ஆகியோர் நன்றாக பந்து வீசினார்கள். நீங்கள் பேட்டிங் செய்ய வரும்போது ஈகோவுடன் வரக்கூடாது. ஒன்று சாதாரணமாக வரவேண்டும் இல்லை என்றால் மோசமான பந்தை தண்டிக்க வேண்டும். நீங்கள் பவுலரை மதிக்காவிட்டாலும் குறைந்தது நல்ல பந்துகளையாவது மதிக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் நல்ல பந்துகளுக்கு கண்டிப்பாக மதிப்பு கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
