நாடு முழுவதும் வட மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல மாநிலங்களின் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பல மாநில அரசுகள் தக்காளி விலை குறைப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.200 வரை உள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த தக்காளி விவசாயி ஒருவர் ஒரே நாளில் ரூ.38 லட்சம் சம்பாதித்துள்ளார். பெத்தமங்கலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகர் குப்தா, இவரது சகோதரருக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் தக்காளி பயிரிட்டிருந்தனர். செவ்வாய்கிழமை சந்தையில் ஒரு பெட்டி ரூ.1900க்கு என மொத்தம் இரண்டு ஆயிரம் பெட்டிகளை விற்றுள்ளனர். தக்காளிக்கு அதிக விலை கிடைத்ததால் இவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.