ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இ வி கே எஸ் இளங்கோவன் கடந்த வாரம் XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பிறகு உடல் நலம் தேடி வருவதாக தகவல் வெளியான நிலையில் மீண்டும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இ வி கே எஸ் இளங்கோவன் 22 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதால் டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.