தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில் மீண்டும் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாபரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத் துறைஉத்தரவிட்டுள்ளது. தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழகத்தில் தினசரி 11,000 கோவிட்பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். மாவட்டம் தோறும் மக்கள் தொகைக்கு ஏற்ப பரிசோதனை நடத்த வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 200ஐ கடந்துள்ளது.
