அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் பொதுக்குழு மீதான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அதில் இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் முற்றிலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள இபிஎஸ் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில் அதிமுகவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அங்கீகாரம் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடும் படியும் கோரப்பட்டுள்ளது. இபிஎஸ்-சின் இந்த மனுவை ஏப்ரல் பத்தாம் தேதி விசாரிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.