இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஏப்ரல் எட்டாம் தேதி அதாவது நாளை சனிக்கிழமை தமிழகம் வருகிறார். என் நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 1260 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை செயல்பாட்டுக்கு தொடங்கி வைக்க உள்ளார். இதனால் விமான நிலையத்தின் பயணிகள் சேவை திறன் ஆண்டுக்கு 2.3 கோடியில் இருந்து 3 கோடியாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் பொதுச் செயலாளர் பிரச்சனை சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில் பிரதமர் மோடி உடன் தற்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.