தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில், பால் உற்பத்தியாளர்கள் வங்கி கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க ஆவின் பால் பெருக்கு திட்டம் செயல்படுத்தப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அதில் அமைச்சர் நாசர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி ஆவின் பண்ணைகளில் 30 கோடியில் பால் பாக்கெட் தயாரிக்க தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும். 25 கோடியில் 10 ஏக்கர் பரப்பளவில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் புதிய கால்நடை தீவனங்களை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.