கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்றமே பத்தாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 113 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே ஆட்சியில் அமரும். இதனை தொடர்ந்து அந்த மாநிலத்தில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் 124 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த மார்ச் 25ஆம் தேதி காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. 100 வேட்பாளர்கள் பட்டியலை ஏற்கனவே காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில் 42 பேர் அடங்கிய இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு அறிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடந்த கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் உறுதி செய்யப்பட்டது.