தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தென்னை நார் பொருள்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு 25% மானியம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 12000 பெண்களுக்கு 1.56 கோடியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் பொருட்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த மெய்நிகர் கண்காட்சியாக உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.