தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் சென்னை வடபழனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்துகொண்டு பேசினார். அப்போது 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறினார். அவர் முதலில் நான் தனியாகத்தான் வருவேன். முதலில் நான் யார் என்பதை காட்ட வேண்டும்.

அதன் பிறகு தான் கூட்டணி. மற்ற விஷயங்களை பிறகு பார்ப்போம் என்று கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக கூறி புதிய கட்சி தொடங்கியுள்ள நிலையில் நடிகர் விஷாலும் தற்போது புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக அறிவித்துள்ளார்.