தமிழ் சினிமாவில் முகமூடி மற்றும் பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அதன்பிறகு பாலிவுட் சினிமாவிலும் நடித்து  வருகிறார். இவர்  நடித்த சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தற்போது மும்பையில் புது வீடு வாங்கியுள்ளார். அவர் மும்பையின் பாந்திரா பகுதியில் உள்ள கடற்கரை அருகே புதிய வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த வீட்டை அவர் 45 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். மேலும் இன்டீரியருக்கு செலவு செய்து வீட்டை சொகுசு மாளிகை போல் மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.