2025 ஆம் ஆண்டு முடிவுக்கு வரவுள்ள நிலையில், இந்த ஆண்டில் திரையுலகில் நிகழ்ந்த முக்கியமான தனிப்பட்ட நிகழ்வுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள் மற்றும் நடிகர்கள் குறித்த விவரங்களைப் பார்ப்போம்.
நடிகை சமந்தா, பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமொருவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் 1-ம் தேதி ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்கபைரவி கோவிலில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக இவர்களின் திருமணம் நடைபெற்றது.
நடிகை பார்வதி நாயர், கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சாக்சி அகர்வால், கடந்த ஜனவரி 2-ம் தேதி நவ்நீத் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
முதலும் நீ முடிவும் நீ’ திரைப்படத்தில் நடித்த நடிகர் கிஷன் தாஸ், தனது நீண்ட நாள் தோழி சுச்சித்ராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜனவரி 31-ம் தேதி நடைபெற்றது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சம்யுக்தா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த நவம்பர் மாத இறுதியில் நடைபெற்றது
நாடோடிகள்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை அபிநயா, தன்னைப் போல மாற்றுத்திறனாளியான வேகேசன் கார்த்திக் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நடைபெற்றது.
பிக் பாஸ் பிரபலமான நடிகை பாவனி ரெட்டி, கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சக போட்டியாளரான அமீரை காதல் திருமணம் செய்து கொண்டார். பாவனிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பசங்க’ திரைப்படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீராம், தனது நீண்ட நாள் காதலியான நிகில் பிரியா என்பவரை மணமுடித்தார். இவர்களது திருமணம் கடந்த ஜூன் மாத இறுதியில் நடைபெற்றது.
சின்னத்திரை நடிகர் சந்தோஷ் – நடிகை மவுனிகா ஜோடி, கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் எளிமையான முறையில் திருமணம்
